வாய் துர்நாற்றத்தால் அவதிபடுவரா நீங்கள் !! இதோ அதை எளிதில் போக்கும் வழிமுறைகள் !!
அவசியமான தகவல்கள் !!!
நாம் அன்றாடம் எழுந்ததும் நம்முடைய முதற்கட்ட வேலைகளில் ஒன்று பல துலக்குவது இது எந்த அளவிற்கு நமக்கு முக்கியமோ அதை காட்டிலும் பிறருக்கும் இது மிக முக்கியம். காரணம் நாம் தூங்கி எழுந்ததும் நம்முடைய வாயில் இருந்து வரும் நாற்றத்தை நம்மால் சமாளிக்க முடியாது நமக்கே அப்படி என்றால் பிறர் அதை அசவுகரியமாக எண்ணுவர். இந்த வகையில் உணவு என்பது நம் வாழ்வின் முக்கியமான பங்காக அமைகிறது. ஆனால், உணவு உண்ட பிறகு நாம் செய்யவேண்டிய சில முக்கிய விஷயங்களை செய்யவில்லை என்றால், பின்னர் அவதிக்கு ஆளாக வேண்டியதுதான்.
பலரும், வாய் துர்நாற்றம் (Bad Breath), பலர் அனுபவிக்கும் ஒரு பரவலான பிரச்சனையாகும். இது பல காரணங்களால் ஏற்படுகிறது. மருத்துவ மொழியில் இது பாக்டீரியாவால் ஏற்படும் ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும்போதெல்லாம், உணவில் இருக்கும் சர்க்கரை மற்றும் மாவுச்சத்தை வாயில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் உடைக்கின்றன.
இந்த செயல்பாட்டின் போது பாக்டீரியா ஒரு வகையான வாயுவை உருவாக்குகிறது. இது துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் ஈறு நோய் அல்லது பல் சிதைவு காரணமாகவும் வாயில் துர்நாற்றம் ஏற்படுகின்றது. உங்கள் பல் மருத்துவரிடம் பேசி உண்மையான காரணம் என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டும். மேலும், சில வீட்டு வைத்தியங்களைக் கொண்டு வாய் துர்நாற்றத்தின் சிக்கலை ஓரளவிற்கு சமாளிக்க முடியும், இவற்றில் பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
உலர்ந்த வாய், துர்நாற்றம் ஏற்படுவதற்கான மிகப்பெரிய காரணமாகும். வாயில் இருக்கும் உமிழ்நீர் சுரப்பிகள் போதுமான அளவு உமிழ்நீரை உற்பத்தி செய்யாதபோது, வாய் வறண்டு போகத் தொடங்குகிறது. இது உடலில் தண்ணீர் இல்லாததாலும் ஏற்படும். குளிர்காலத்திலும் கோடை காலத்திலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு உடலின் நீர் தேவையும் வேறுபடுகிறது. சராசரியாக ஒருவர் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீரைக் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
0 comments: