Friday, November 11, 2022

School Morning Prayer Activities 11-11-2022

School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.11.2022

திருக்குறள் :

பால்:அறத்துப்பால் 

இயல்:பாயிரவியல் 

அதிகாரம்:அறன் வலியுறுத்தல் 

குறள் : 36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.  

பொருள்:

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்

பழமொழி :

Better do a thing than wish it to be done.

தன் செயலைத் தானே செய்தல் அழகு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன் 

2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன்.

பொன்மொழி :

நேரம் என்பது ஒரு மாயை. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பொது அறிவு :

1. ஷட்டில் காக் விளையாட்டில் பயன்படுத்தும் பந்துகளில் எந்தப் பறவையின் இறகுகள் பயன்படுத்தப்படுகின்றன? 

வாத்து இறகு. 

2. ஐஸ் கட்டிகளை தெர்மாகோலில் வைப்பது ஏன்? 

தெர்மாகோல் வெப்பத்தையும் குளிரையும் அரிதில் கடத்தி.


English words & meanings :

Vitrics - study of glass materials. Noun. கண்ணாடி பொருட்கள் குறித்த அறிவியல்


ஆரோக்ய வாழ்வு :

முலேத்தி, எந்த கலவையிலும் உட்கொண்டால், இருமல், சளி, தொண்டை புண் மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகளிலிருந்து பரந்த நன்மைகள் மற்றும் நிவாரணம் கிடைக்கும். முலேத்தி குச்சிகளை எந்த கலவையும் இல்லாமல் உட்கொள்ளலாம். வேரின் ஒரு துண்டை மென்று சாப்பிடுவது இருமலில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது மற்றும் தொண்டையை சுத்தப்படுத்துகிறது.


NMMS Q :

சமணத்தின் தொடக்க காலத்தில் சமணத்துறவிகள் சமணத்தின் ___________உறுதிமொழிகளைக் கடுமையாக பின்பற்றினர்.

 விடை ஐந்து


நீதிக்கதை -பூனையும் எலியும்

ஒரு ஊரில் சக்தி என்றொருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தான். பூனை வந்ததும் எலிகளால் முன்புபோல தானியங்களை திருட முடியவில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது. அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி. அதை நண்பனாக்கா வேண்டாம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாது. அதனால், நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது. 

10 11 22 School Morning Prayer Activities

கிழட்டு எலி சொல்வதைக் கேட்டு, மற்ற எலிகள் வீட்டை காலி செய்தது. ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ளவேண்டும் என்று சொன்ன எலி மட்டும் போகவில்லை. எப்படியாவது பூனையை நண்பனாக்கிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கலாம் என்று அவ்வீட்டிலேயே தங்கிவிட்டது. ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்துவிட்டது. பூனையிடம் மாட்டிய எலி, பூனையாரே என்னை விட்டுவிடு. நான் உன் நண்பனாக விரும்புகிறேன். என்னை விட்டு விட்டால் உனக்கு தினமும் விதவிதமான தின்பண்டங்களைத் தருகிறேன். மேலும் உனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் தானே கிடைக்கிறது என்று ஆசை வார்த்தைகள் கூறியது. பூனையோ, ஏ எலியே எனக்கு பாலும், காய்ந்த ரொட்டியும் போதுமானது. நீ நாளை தரும் தின்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்று கிடைக்கும் உனது கறியை இழக்க நான் முட்டாளில்லை என்று சொல்லி எலியைக் கொன்று ருசித்து சாப்பிட்டது. 

நீதி :

எதிரிகளிடம் நியாயம் எதிர்பார்ப்பது தவறு.


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: