நாற்பது வயதிற்கு மேல் இளமையாக ஜொலிக்க சில சூப்பர் டிப்ஸ்....
நாற்பது வயது கடந்த பிறகுதான் நமது முகத்தில் சுருக்கங்களும் தோல் தொங்குவதும் நம் கண்களுக்கு அடியில்சருமம் சுருங்குவதும் ஆரம்பிக்கும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் எளிதில் முதுமை தோற்றம் உண்டாகும். முன்னர் போல் இல்லாமல் நாற்பது வயதுகளிலும் பெண்கள் முப்பது வயது போல் தோற்றம் தோற்றமளிக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் நம்மிடையே சரும பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வேயாகும். நல்ல சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுடன் நமது அழகையும் நல்லபடி பராமரித்து வந்தால்நாம் என்றுமே இளமையாக வாழலாம்.
இளமையாக இருப்பவர்கள் அவர்கள் நிறைய நீர் குடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். DAILY அதிகாலையில் 1 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் நமது சருமம் பளபளப்பாக இருக்கும். மற்றும் நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
எமது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்கழிவுகளும், சருமத்தில் உள்ள இறந்த சரும செல்களுமே நமக்கு வயதான தன்மையை காட்டுகின்றது . இந்த நச்சுக்கழிவுகளை தினமும் வெளியேற்றி விட்டால் நமது சருமம் என்றுமே இளமையாக பளபளப்பாக இருக்கும்.
நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் பப்பாளிபழம், நாட்டு கோழி முட்டை, சுத்தமான தேன் போன்றவற்றை பயன்படுத்தி தோல் சுருக்கங்கள் இல்லாமல் ஆரோக்கியமான சருமத்தைப் பெற்று தோல் தொய்வடைவதிலிருந்து மீளமுடியும் . ஏழு நாட்களுக்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒருமுறை இதனை செய்தாலே போதும்.
சீனி , பச்சை பயறு மாவு , தயிர் போன்ற இயற்கையான ஸ்கர்ப்பினால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை முற்றாக அகற்றலாம். இவை நமது சருமத்தை முதிர்ச்சி அடையாமல் காக்கும்.
நீங்கள் என்ன சாப்பாடு சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்துதான் உங்கள் உடல் ஆரோக்கியம் சரும ஆரோக்கியம் இருக்கும். எனவே இரண்டு வகையிலும் பயன் தரும் நமது சருமத்தை ஆரோக்கியமான சாப்பிட்டிலும் நம் அழகாக வைத்துக்கொள்ள முடியும். எனவே நல்ல உணவுகள் உடற்பயிற்சியை தவறாமல் தினமும் வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் நமது சருமத்தை மிகவும் பாதிக்கும் நம்மை முதுமை அடையச் செய்யும். எனவே சன் ஸ்க்ரீன் லோஷன் பாவிக்காமல் வெளியே போவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இரவு நித்திரைக்கு முன்னர் சருமத்திற்கு போஷாக்கான க்ரீம்களை பூசலாம் . க்ரீம்தான் பூசவேண்டும் என்றில்லை. ஒலிவ் எண்ணெய்- பால் க்ரீம்- தேங்காய் என்ணெய் போன்றவற்றை பூசினால் இரவில் நீண்ட நேரம் எண்ணெய் நமது சருமத்தில் ஊடுருவி சருமம் பொலிவு பெரும்.
நாற்பதுகளில் சருமம் காய்ந்து போக ஆரம்பிக்கும். ஆரோக்கியமான சருமம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். நல்ல தரம்வாய்ந்த மாய்ஸ்ரைசரை பாவிப்பதால் சருமத்தில் வறட்சி ஏற்படாமல் வைத்து கொள்ளலாம்.
நமது வீட்டில்அன்றாடம் நாம் பயன்படுத்தும் , பால், தேன், பாதாம் போன்றவை சருமத்திற்கு போஷாக்கு ஊட்டி ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
facial at home
facial tips
beauty tips for face
beauty tips in tamil
facial hair removal face tips in tamil,
facial at home step by step
how to do facial face beauty tips in tamil
face brightness tips in tamil,
facial massage,
beauty tips for face whitening in tamil,
face whitening
0 comments: