❤️ காதல் கவிதைகள் 💚🌹
காதல் கவிதை வாட்ஸப் ஸ்டேட்டஸ் தமிழில்
தமிழ் காதல் கவிதைகள் மற்றும் தமிழ் காதல் 'Quotes" பற்றிய சமீபத்திய கலெக்சன் இங்கே உள்ளன. தமிழில் சிறந்த காதல் கவிதைகள்.
🌹 துவட்டுவது
உன் கரங்கள்
என்றால்
நீராடுவேன்
மீண்டும் மீண்டும்
என்னவனே...☘️💕😍
🌹 அடம் பிடிக்கும்
மனம் அடிமையானது
உன் அன்பிடம்...☘️💕😍
🌹 எப்படி அலங்கரித்து
கொண்டாலும்
உன் வசீகர
பார்வையின்
முன் அத்தனையும்
அலங்கோலம் தான்...☘️💕😍
🌹 எண்ணங்களுக்கு
பஞ்சமேயில்லை
உனக்கான ரசனையில்
தொடர்கிறது
முற்றுப்புள்ளி இன்றி
நினைக்க நினைக்க
இனிமையாய்...☘️💕😍
🌹 மனதிலும் மத்தாப்பு
பல வண்ணங்களில்
உனை காண
கண்கள்
சந்தோஷ தீப்பொறியாய்...☘️💕😍
🌹 பஞ்சணையில் இல்லாத
மென்மை
உன் நெஞ்சணையில்
உறக்கமும் வருடுது
கண்களை மயிலிறாகாய்...☘️💕😍
🌹 ஊடல்கள் நமக்குள்
புதிதில்லை என்றாலும்
பல மணிநேர
மௌனத்தின் பின்
உன் குரல் கேட்க
கண்களும் நனையிது
ஆனந்தத்தில் தொலைத்தது
கிடைத்தது போல்...☘️💕😍
🌹 வண்ணங்கள் கலையாத
வானவில் நீ
என் மன வானில்...☘️💕😍
🌹 பேசா நொடிகளில்
பேசி கொல்கிறாய்
பார்வையில்...☘️💕😍
🌹 பல வே(லை)ளைகளில்
நீயெனை மறந்திருந்தாலும்
எந்நொடியிலும்
நினைத்திருப்பது நானுனையே...☘️💕😍
🌹 அத்தனை
மன அழுத்தத்திலும்
ஒரு ஆறுதல்
என்றால்
அது நீயே...☘️💕😍
🌹 ஒரு முறையேனும்
வீழ்த்திட வேண்டும்
நானுனை ஜெயித்திட
விழி போரில்...☘️💕😍
🌹 வார்த்தைகளில்
கூறாவிட்டாலும்
வாழ்க்கையில் அடிக்கடி
உணர வைக்கிறாய்
உனக்கென் மீது
அதீத காதலென்று
எதிர்பாரா
இன்ப அதிர்ச்சிகளை
கொடுத்து...☘️💕😍
🌹 உன் நினைவு
அசைபோட
என் நிழலும்
துணை சேர
பாதமும் பயணிக்குது
நாம் நடந்த பாதையில்...☘️💕😍
🌹 கோர்த்த வார்த்தைகளை
சேர்க்கும்முன்
கொட்டித் தின்கிறது
வெட்கம்...☘️💕😍
🌹 நான் ஆசை
படுவதெதுவும்
நிராசையானதில்லை
உன்னாசைகள்
எனக்காக என்பதால்...☘️💕😍
🌹 எண்ணத்தில் இருப்பதை
என்னில் கிறுக்கி
எனையும்
கிறுக்காக்குகிறாய்
கிராதகா...☘️💕😍
🌹 ஆலயத்தில் சிறப்பு
மணியோசையாய்
மன ஆலயத்தில்
சிறப்பு
உன் நினைவோசை
இசைக்கும்
இன்னிசையாய்...☘️💕😍
🌹 காணாத போதும்
கண்முன்னே
நடமாடும்
என் விழிகளின்
ஜீவன் நீ...☘️💕😍
🌹 நீரில் மூழ்கியும்
அணையவில்லை
உன் நினைவு தீ...☘️💕😍
🌹 உன் அகிம்சையே
எனை தூண்டுகிறது
அராஜகமாய்
உனை காதலிக்க
என்னவனே...☘️💕😍
🌹 கனமில்லா மலர்
கூடையாய் மனம்
எத்தனை சுமைகள்
இருப்பினும்
உடன் நீயிருப்பதால்...☘️💕😍
🌹 ஓய்வில்லா நெடுஞ்சாலையாய்
மன சாலையில்
நீ நடமாடுகிறாய்
வருவதும் போவதுமாய்...☘️💕😍
🌹 கலைந்த கனவுகளை
மீட்டுக்கொடு மீண்டுமொரு
கனவு காண
திரானியில்லை
கண்களுக்கு...☘️💕😍
🌹 உனக்கும்
தான் எத்தனை
சுயநலம்
என்னை மறந்து
உனையே
நினைக்க வைத்து
விட்டாயே நினைவாகி...☘️💕😍
🌹 ஜெபிக்கின்றேன்
உன் பெயரை
அர்ச்சனையாய் தினம்
இதய கோவிலிலே...☘️💕😍
🌹 தொடு திரையிலும்
தொட்டிழுக்குறாய்
மனதை
காந்த பார்வையில்...☘️💕😍
🌹 மார்கழி குளிராய்
மனம்
உன் ஆடை
போர்வையாக...☘️💕😍
🌹 உன்னெதிரே
நான் இல்லாத
வேளைகளிலும்
உன் விழிகளுக்குள்
வாழ்வதும்
நானென்றறிவேன்
என்னவனே...☘️💕😍
🌹 மையும் சொல்லும்
உன் மீதுள்ள
மையல்களை
கவிதையாய் கரைந்து
விழிகள் எழுத...☘️💕😍
🌹 நீ என்ற
நினைப்பே
எனை
நீந்த செய்கிறது
மகிழ்வாய்
அன்பில் அழகாய் ...☘️💕😍
இதையும் படிங்க:🌺💚👇
- காதல் கவிதைகள் 2022 - Tamil Love WhatsApp Status ❤
- அம்மா கவிதைகள் :: Tamil Amma Kavithai 2022
- Whatsapp Picture Status :: in Tamil வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் படங்கள் 2022
- Whatsapp Status in Tamil வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சிந்தனை கவிதைகள்
- Best Tamil Love Status :: காதல் கவிதை Kavithai in Tamil Font
- Whatsapp DP :: Tamil Love Status காதல் கவிதை Kavithai in Tamil Font 💚🌹
0 comments: