காதல் கவிதைகள் 2022 - Tamil Love Status ❤
Kadhal Status in Tamil
👇👇👇👇👇👇👇
உனக்கான வரிகள்
என்றால்
சற்று தயங்கிதான்
போகிறது
எழுதுகோலும் எழுத
பொய்கள் கலக்க
பிடிக்காமல் கவிதையில்
இன்பமான வலியே
உன் தேடலில்
தொலைதலும்
சிந்தாதே சிரிப்பை
சிதறுகிறது
என் சிந்தனையும்
வேண்டுதல்கள்
என்று எதுவுமில்லை
உன் தரிசனத்துக்காகவே
அர்ச்சனை
படிப்பதெதுவும்
மனதில் நிலைப்பதில்லை
மனதோடு
நீ மனப்பாடமாகி
போனதால்
===============================
நீ நினைக்க
மறந்தாலும்
உன் கண்கள்
நினைவூட்டும்
விழிகளுக்குள்
இருப்பது நானல்லவா
கவிதையை
ரசிக்கும் போதும்
அதில் அழகிய
வரிகள் நீ
தொடர்கின்றாய்
என்றே
தொடர்ந்தேன்
நீ முற்றுப்புள்ளி
வைத்ததை அறியாமல்
மன ஏட்டுக்கு
ஒதுங்கித்தான்
போகின்றேனே
தவிர
உன்னை மனதிலிருந்து
ஒதுக்கிடவில்லை
கை நழுவும்போது
சிறு தவிப்பு
நீ இறுக
பற்றிக்கொள்ள
மாட்டாயா என்று
===============================
என்னை
நான் ரசித்ததைவிட
எனக்குள்ளேயே பேசி
உன்னை ரசித்ததுதான்
அதிகம்
பார்வை படும்
தூரமெல்லாம்
பயணிக்க ஆசை
நீ உடனிருந்தால்
வண்ணங்களில்
வாழ்க்கையில்லை
என்றாலும்
உன் எண்ண அழகில்
வண்ணமானது
நம் வாழ்க்கை
மறக்க நினைக்காத
நினைக்க சலிக்காத
உறவென்றால் அது
நீ மட்டுமே
வழி தவறியாவது
வர மாட்டாயோ
என் விழிமுன்னென
காத்திருக்கிறேன்
===============================
பல பக்கங்களை
புரட்டிய போதும்
ஒரு பக்கத்திலும்
அறிய முடியவில்லை
உன் மௌனத்துக்கான
காரணத்தை
மன புத்தகத்தில்
கோர்க்கின்றேன்
மலரோடு மனதிலும்
ஒரு மாலை
கனவோடு
நீ வந்தால் சூட
மழையில்
நனைவதும் பிடிக்கும்
குளிர் காய்வது
உன் பார்வை
வெப்பத்தில் என்றால்
நம் நினைவு
சுவையில் பருக
நினைத்த தேனீரும்
ஆறிப்போனது
சுவையற்று
உன்னில் ஏக்கமென்று
எதுவும் இல்லாதபோதிலும்
ஏதோவொரு தாக்கத்தை
ஏற்படுத்ததான் செய்கிறாய்
உனை நினைக்க வைத்து
===============================
என்னிடம் பேச
காத்திருக்கிறாய் நீ
உன்னிடம்
என்ன பேச வேண்டும்
என்று யோசித்து கொண்டே
இருக்கிறேன் நான்
நமக்காக காத்திருக்கிறது காலம்
நாம் இருவரும் பேச போகும்
அந்த அழகிய தருணங்களுக்காக
உனை தேடி
மனம் தொலையவே
ஊடலை தருகிறாயா
அதிக
நேசத்தை தராதே
உன் சிறு
மௌனத்திலும்
மரணத்தின் வலியை
அனுபவிக்குது மனம்
மாலை நேரத்தில்
ஒரு மயக்கம்
மன்னவன் கரம்
மல்லிகையை தீண்ட
விட்டு செல்கிறேன் என்னை
என் மனதை தேடி
வருவாயென்ற
மகிழ்வுடனேயே
===============================
விடிந்த பின்னும்
கலையாத
கனவு நீ
கண்களிலிருந்து
உன்னிடம்
தோற்று நிற்கும்
ஒவ்வொரு தருணங்களிலும்
நான் வெற்றி பெறுகிறேன்
மேகத்தை கலைக்கும்
காற்றாய் கலைக்கின்றாய்
மூச்சு காற்றில் மோகத்தை
என் கிறுக்கல்கள்
எல்லாம்
நம் நினைவின்
செதுக்கல்கள்
மன தரையில்
என்றும் சிதைந்திடாத
மாயைக்கு மயங்காத
மனம்
மூழ்கி போனது
மாய உலகுக்குள்
காண்பதிலெல்லாம்
நீயென்பதால்
உன்னை பிடிக்கும்
என்பதைத் தவிர
வேறென்ன காரணம்
இருந்துவிடப்போகிறது
நான் உன் கரம் பிடிக்க
===============================
கண்ணெதிரே
நீயிருந்தால்
என்னுள்ளத்திலும்
தினமும் கார்த்திகை
தீபம்தான்
(இருளில்லா)
உதிர்ந்த போதும்
வாசம் தரும்
மலரின் இதழ்களாய்
மனதில் சுவாசிக்கிறாய்
நீ பிரிந்த போதும்
தாய்மடி தேடும்
குழந்தையாய்
மனம் நாடுது
உனை துன்பத்திலும்
நினைவில் வாழ்வதுதான்
காதலென்றால்
நிஜமாகவாவே
வாழ்வேன் உனக்காக
மாறினேனா
எனை மாற்றினாயா
இனம்புரியா
இதமான இம்சைகள்
உன்னால்
சண்டைகள் கூட
ஒரு விதமான
சுவாரசியம் என்பதை
அறிந்தது உன்னிடம் தான்
===============================
இரவுக்கு
விடை கொடுத்தபோதும்
உன் நினைவுக்கு
விடைகொடுக்க முடியவில்லை
என் பேனா முனை
வரைவதெல்லாம் ஓவியம்
என நினைத்திருந்தேன்
அவை யாவும்
கீறல்களாகவே மாறியது
என் வாழ்வில்
அகிம்சையும்
ஜெயிக்குமென்று
உணர்ந்தேன்
உன்னிடம்
தோற்ற போது
காதல் களத்தில்
வாழும் போது மட்டுமல்ல
வாழ்க்கை முடியும்
நேரத்திலும்
வாழும் காதல் என்றுமே
அழகானது
யாரோவாயிருந்த நீ
யாதுமானாய்
என்னுள்
மார்கழி குளிர்
என்னயும்
கோலம் போட
வைத்தது
என்னவன்(வள்) கன்னத்தில்
(மார்கழிக்கவிதை 😁)
நிஜமென்றால்
கடந்துவிடும்
கனவென்றால்
கலைந்துவிடும்
நினைவில் மட்டுமே
மிதக்கும்
நீங்காத உன் நினைவு
நிம்மதியாய்
கண்களுக்குள்
மாயங்கள் செய்கின்றாய்
பார்வையில் சிக்காமல்
===============================
என் இரவு
நீயானால்
வெண் நிலவும்
மறைகிறது
விரைவாக
நான் உறங்காமலேயே
பிடிக்காத உளறல்களும்
பிடித்து போனது
உதிர்ப்பது
உன்னிதழ்கள் என்பதால்
சூடான தேனீர்
பருகியபோதும்
மனதை சில்லென
நினைகிறாய்
மார்கழி குளிராய்
நினைவை தூதனுப்பி
பயணித்த
அழகிய வழியை
திரும்பி பார்கிறேன்
இன்று அதில்
வலிகள் மட்டுமே
எஞ்சியிருக்கு
உன் வருகையறிந்து
மல்லிகையும்
மயங்கிக்கிடக்கு
எனை
முந்திக்கொண்டு
நாணத்தில்
தலை கவிழ்ந்து
ஒரு நாளை
கடப்பது
பல நாட்களை
கோர்த்தது
போல் இருக்கிறது
நீயில்லா நாழிகையில்
வெறுக்கப்பட்ட
தனிமையையும்
ரசிக்க
வைக்கிறாய்
என்னுள்ளிருந்து
===============================
இப்படியே
இருந்துவிடேன்
என்னுடனேயே
நீயும் முப்பொழுதும்
உன்னுள்ளேயே
நானும் வாழ
மேகமாய்
நீ விலக
கண்களும்
மழையாகுதே
சற்றே
இமை மூடிக்கொள்ளேன்
யோசித்து வைத்ததை
வாசிக்க வழியின்று
யாசிக்கிறது மனம்
இதயம்
இடம்மாறினால்
உதயமாகும் காதல்
இதழ்கள் இடம் மாறினால்
உருவாகும் கவிதை
0 comments: