தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் தண்ணீரை குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா ? பலரும் அறியா தகவல்கள் உங்களுக்காக !!!
Do you know what are the changes in our body caused by drinking a tumbler of water before going to bed every night? Information that many people do not know is for you !!!
பொதுவாகவே பலருக்கும் உடல் சார்ந்த பல உபாதைகள் இருந்து கொண்டேதான் உள்ளது இதற்கு எல்லாம் காரணம் நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவு முறைகளே காரணம். அந்த வகையில் நம் உடலுக்கு உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதை கட்டிலும் நீரும் அத்தியாவசியமாக உள்ளது. இந்த வகையில் நம்மில் பெரும்பாலானோர் நீரை இரவு நேரத்தில் குடிப்பதைத் தவிர்ப்போம்.
ஏனெனில் இரவு நீர் குடித்தால், நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழ வேண்டியிருக்கும் என்பதால் தான். ஆனால் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், நாம் அறிந்திராத பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். நன்மைகள்.
இதயத்திற்கு மிகவும் நல்லது:
இரவு தூங்கும் முன்பு தண்ணீர் குடிப்பது, இதயத்திற்கு மிகவும் நல்லது. எப்போதெல்லாம் இரவு தண்ணீர் குடிக்கிறோமோ, அப்போதெல்லாம் இதய நோயின் அபாயம் குறைகிறது. ஏனெனில் இது மென்மையான இரத்த ஓட்டத்திற்கு உதவி புரிந்து இதயத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
நல்ல தூக்கம் கிடைக்கும்:
மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது தூக்கத்தைக் கெடுக்கும். இரவு தூங்குவதற்கு முன் ஒருவர் தண்ணீர் குடிப்பதால், அது நாள் முழுவதும் எதிர்கொண்ட அழுத்தத்தைப் போக்குவதோடு, இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.
தசைகள் வலுவாகும்:
இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிக்கும் போது, அது உடலில் புதிய செல்களை உருவாக்குவதோடு, தசைகளை வலிமையாக்கும். ஆகவே உங்கள் தசைகளை வலிமையாக்க நினைத்தால், இரவு தூங்கும் முன் தண்ணீர் குடியுங்கள்.
உடல் களைப்பு நீங்கும்:
பொதுவாக தண்ணீர் குடித்தால் உடல் அசதி நீங்கும். அதுவும் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், நாள் முழுவதும் உழைத்ததால் ஏற்பட்ட களைப்பு நீங்கும். பகலில் நீங்கள் மன அழுத்தத்துடன் இருந்தால், அப்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இது மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும்.
0 comments: