Sunday, October 24, 2021

Why dreams come :: கனவுகள் ஏன் வருகிறது..? கனவு வருவதால் ஏற்படும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன..?

கனவுகள் ஏன் வருகிறது..? கனவு வருவதால் ஏற்படும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன..?

உலகத்தில் காசு பணம் இல்லாதவர்கள் கூட இருக்கலாம் ஆனால், கனவு வராத ஆட்களே இருக்க முடியாது. கனவு ஏன் வருகிறது, கனவு வருவதற்கான அடிப்படை காரணங்கள் என்னவாக இருக்கும், கனவு வருவதால் கிடைக்கும் நன்மையை பற்றி காண்போம்.


ஒரு மனிதன் அன்றாட வாழ்வில் கண்ணால் பார்க்கும் சம்பவங்களில் சில சம்பவங்கள் மட்டும் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. சில சம்பவங்கள் மூளையில் அடுக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் விபத்தாகவோ, திருமண நிகழ்வாகவோ, பள்ளி, கல்லூரி மற்றும் சுற்றுலா சென்ற இடங்களில் பார்த்த விஷயங்களாகவும் இருக்கலாம். (ஆழ் மனதில் பதிந்த சம்பவங்களை வெளியே கொண்டு வரும் முறைக்கு பெயர் ஹிப்னாடிசம் ஆகும். மனநலம் பாதித்தவர்களுக்கு கூறப்படும் விளக்கமும், ஆலோசனைகளும் மனநலம் பாதித்தவர்களின் ஆழ்மனதில் பதிந்த நினைவுகளை வைத்தே மனோ தத்துவ நிபுணர்கள் வழங்குகிறார்கள்.)

ஒரு விபத்து ஏற்பட்டால், அதை பார்க்கும் கண்களின் மூலமாக எண்ணங்களின் வழியே அந்த காட்சிகள் அனைத்தும் நமது மூளைக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது. 

கண்ணால் பார்த்த சம்பவங்களை இரவு நேரத்தில் மூளையில் அடுக்கி வைக்கப்படும் போது, மூளையில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களின் மூலம் எதிர்வினை செய்யப்பட்டு கனவுகள் ஏற்படுகிறது. பகல் நேரங்களை விட இரவு நேரத்தில்தான் நமது மூளை மிக வேகமாக செயல்படுகிறது.

வெளிப்புறத்தில் கண்ட நிகழ்வுகளின் அகச் சேமிப்பில் இருந்து வெளிவரும் பிரதிபலிப்பே கனவு என்று சுருக்கமாக கூறலாம். பலருக்கு அடிக்கடி பேய் கனவோ, பயத்தை உண்டாக்கும் கனவோ அல்லது யாரோ ஒருவர் உங்களை துரத்துவது போன்ற கனவு வந்திருக்கும். இதற்கு முக்கிய காரணம் மனிதனின் ஆதிகால மரபணுவாகும். ஏனெனில், ஆதிகால மனிதனின் வாழ்க்கை எப்போதும் முழு பாதுகாப்பானதாக இருந்ததில்லை. 

விலங்குகளின் மூலமோ, இயற்கையின் மூலமோ அல்லது ஏதோ ஒரு வகையில் அவன் பாதுகாப்பற்ற பயத்துடனே வாழ்ந்து வந்துள்ளான் அதன் தொடர்ச்சியே இன்றும் நம்மை பயமுறுத்தும் கனவுகள் வருகின்றன.

இரவில் நன்றாக தூங்கினால் மட்டுமே கனவு வரும். 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் நபர்களுக்கு கனவு வர வாய்ப்பு மிக குறைவு. 

ஆழ்ந்து தூங்குபவர்களுக்கு கனவு வருவது மட்டுமில்லாமல் ஆரோக்கியமும் சேர்ந்தே கிடைக்கிறது. காலை விழித்த பின் இரவில் வந்த கனவுகள் 95% தானாகவே அழுந்துவிடுகின்றன. மூளைக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட தொலைவில் நடக்கும் எதிர்மறை எண்ணங்களே கனவு வருவதற்கான காரணம் என்று மாற்று கருத்தும் சொல்லப்படுகிறது.

ஒரு நாளைக்கு மட்டுமே 5 லிருந்து 7 கனவுகள் வருவதாக கூறப்படுகிறது. இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு கனவுகள் மட்டுமே கண்விழித்த பின் நியாபகத்தில் இருக்கும். அதுவும் முழுமையாக இருக்காது என்பதே உண்மை.

குறிப்பு : மனித மூளையில் சிப் ஒன்றை பொருத்தி கனவுகளை ரெக்கார்ட் செய்வதற்கான முயற்சியை ஜப்பானில் உள்ள ஒரு மனோ தத்துவ குழு மேற்கொள்வதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.


இதையும் படிங்க:


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: