Wednesday, June 1, 2022

Whatsapp DP Status in Tamil :: வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் படங்கள் 2022 [தத்துவ கவிதைகள்]

 தத்துவ கவிதைகள்




ஒரு முட்டாள்

தன்னுடன் வாழ முடியாமல்

விட்டுப் போனவர்களை

நினைத்து வருத்தப் படுவான்

ஒரு புத்திசாலி

தன்னை விட்டுப் போனவர்கள்

வருத்தப்படும் படி

வாழ்ந்து காட்டுவான்...!



நீ யார் என்பதை

உன் செயல் தான்

சொல்லனுமே தவிர

அடுத்தவன்

சொல்லக்கூடாது...!



நம்முடைய புன்னகை

நம்மை மட்டுமல்லாமல்

நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும்

உற்சாகத்தை கொடுக்க வேண்டும்...!



மணம் வீசும் மலர்கள்

மாலைக்கு அழகு.

நல்ல மனம் கொண்ட மனிதர்கள்

வாழ்க்கைக்கு அழகு...!



வழிகாட்டியாய் யாரையும்

நம்பி பயணித்தல் சிறப்பு

வழித்துணையாய் யாரையுமே

நம்பி பயணித்தல் சிறப்பல்ல...!



நிதானம்

தவறும் போதெல்லாம்

ஒன்றை மட்டும்

நினைவில் கொள்

வார்த்தைகள் கூர்மையானது

நம்மை எப்போதும்

சிதைக்கக் கூடும்...!



சிலர் நமக்கு

மனவலிமை தருகிறார்கள்

சிலர் நமக்கு

மனவலியை தருகிறார்கள்

மனவலிமையோடு மனவலியை

கடந்து செல்வோம்...!



நாம் என்ன செய்கின்றோம்

என்பதை அறிந்து

செய்தாலே பாேதும்

தாேல்வி நம்மை விட்டு

சற்று விலகியே இருக்கும்...!



ஹிட்லர் வாழ்க்கையும்

வேண்டாம்

புத்தன் வாழ்க்கையும்

வேண்டாம்

அவரவர்க்கு உண்டான

வாழ்க்கை வாழ்ந்தால் போதும்

உலகம் அழகாய் தெரியும்...!



போலியான

உபசரிப்புகளை விட

உண்மையான

திமிர் அழகானது

பெருந்தன்மையாக

நடிப்பதை விட

இயல்பான அகம்பாவம் மேலானது...!



முட்டாள்கள் பேசியே

தங்களை காட்டிக் கொடுக்கிறார்கள்

அறிவாளிகள்

மௌனமாக இருந்தே

முட்டாள்களை கண்டுபிடிக்கிறார்கள்...!



வெற்றிடம் வெகு சுலபமாக

நிரப்பப் படுகிறது

உறவுகளில் வெற்றிடத்தை

உண்டாக்காதீர்கள்

உங்கள் இடத்தை பறிகொடுத்து

விடாதீர்கள்...!



ஒரு குறையும் இல்லை

எப்பொழுதும்

மகிழ்வுடன் இருப்பாய்

என்ற நம்பிக்கை

தரும் சொற்கள்

தரும் உற்சாகங்கள்

பேரழகானவை...!



இப்பூவுலகில் உள்ள

பூக்களும் பொறாமை

கொள்ளட்டும்

நம் புன்னகையைக் கண்டு

புன்னகைப்போம் பூக்களுக்கும்

ஓய்வு கொடுப்போம்...!



எதிர்காலத்தை பற்றி

கவலைபடாதீர்கள்

எவ்வளவு கவலைபட்டாலும்

நடப்பது தானாக நடந்து

கொண்டு தான் இருக்கும்...!



விடையில்லாத கேள்விகளும்

தீர்வில்லாத பிரச்சினைகளும்

எல்லோர் வாழ்விலும் உண்டு

புன்னகைத்துக் கொண்டே

கடந்து செல்வதில் தான்

சாமர்த்தியம் இருக்கிறது...!



தேவைக்காக அன்பு

காட்டுறவங்களையும்

தேவ வரும் போது

மட்டும் அன்பு காட்டுறவங்களையும்

கூடவே வச்சுக்கக்கூடாது...!



இலக்கு சரியாக இருந்தால்

வழி தானாக பிறக்கும்.

எண்ணங்கள் சீராக இருந்தால்

செயல்கள் வெற்றிகரமாக முடியும்...!



புன்னகைக்கு அளவும் இல்லை

வயது வரம்பும் இல்லை

புன்னகை செய்வோம்

எதிரிகள் நம்மை கடக்கும் போதும்

யாரும் நம்மை

எதிரியாக நினைக்காமல் இருக்கவும்...!



உங்களின்

வசதியோ

பணமோ

அழகோ

உங்களை உயர்த்துவதில்லை

உங்களின் நற்செயலே

உங்களை உயர்த்தி காட்டும்

நல்லதையே சிந்திப்பீர்

நல்லதையே செய்வீர்...!



போராடும் மனங்கள்

விடியலில் போர்வைக்குள்

ஒளிந்திருப்பதில்லை

புது விடியலை

புதுப்பிக்க காத்திருக்கும்

புன்னகையுடன்...!

இன்றைய நாளை

தொடங்குவோம்



பிடித்து பழகுபவர்களை விட

பொழுது போக்காய்

நினைத்து

நடித்து பழகுபவர்களே...!

இங்கு அதிகம்



மற்றவர்களுக்கு ஏற்றவாறு

உன்னை மாற்றிக்கொள்ளாதே

கடைசி வரை

நீ நீயாக இரு...!



நம் வெற்றி

நம்மேல் பொறாமை உள்ளவர்களை

ஆத்திரப்படுத்தும்

நம்மை தாழ்வாக நினைத்தவர்களை

ஆச்சரியப்படுத்தும்

நம் மீது உண்மையான

அன்புள்ளவர்களை

ஆனந்தப்படுத்தும்...!



பிடிக்குதோ

பிடிக்கலயோ

ஒவ்வொரு நாளையும்

புன்னகையோடு கடந்து

வருவோம்...!



நிகழ் காலத்திற்கு இலையாக

இறந்த காலத்திற்கு சருகாக

எதிர்காலத்திற்கு உரமாக

முக்காலத்திற்கும்

பொருந்துகிறது ஓர் இலை...!



மறந்து விட்டேன்

நமக்கு நாமே

சொல்லிக்கொள்ளும்

சமாதானம்...!



சந்தோசத்தில்

கை குலுக்கும்

ஐந்து விரல்களை விட

கஷ்டத்தில்

கண் துடைக்கும்

ஒரு விரலே மேலானது...!



ரசிக்கும் பார்வையை

பொறுத்தே

வாழ்க்கை அழகாகவும்

அர்த்தமாகவும் ஆகிறது

வாழும் வாழ்க்கையை

ரசித்து வாழ்வோம்

வாழ்த்துக்கள் உறவுகளே...!



நேற்று நேரமே

கிடைக்கலை என்றோம்

இன்று நேரத்தை

கடத்த வழி

தேடி கொண்டு

இருக்கிறோம்...!



கிடைக்காமல்

போன இன்பத்தை விட

தேடாமல் விட்ட

இன்பங்களே அதிகம்...!



ஏதோ ஒன்றை

கற்றுக் கொள்ள வேண்டும்

என்ற ஆர்வம் மட்டும்

இருந்தால் போதும்

அந்த விஷயம்

வெகு சுலபமாக

உங்களால்

கற்றுக் கொள்ள முடியும்

அதில் சிறப்பானவராக

திகழவும் வாய்ப்பு அமையும்...!



நாம் காத்திருப்பது

தெரிந்தும்

அடுத்தவர்களுக்கு

முக்கியத்துவம்

கொடுப்பதெல்லாம்

அவர்களுக்கே

உள்ள அலட்சிய குணம்...!



பணிவு என்பது

ஒருபோதும்

பலவீனம் அல்ல

பணிவு மிக பெரிய பலம்

ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்

பணிவுடன் இருப்பவர்

கோழை அல்ல...!



கடந்து செல்ல

கற்றுக்கொள்

உன்னை

குறை கூறுபவர்கள்

யாவரும்

உத்தமர் இல்லை என்பதை

நினைவில் வைத்து...!



அனுபவசாலி என்பவர்கள்

வயதை கடந்து வருபவர்கள்

அல்ல

வலியை கடந்து வருபவர்கள்...!













SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: