❤️ காதல் கவிதைகள் 💚🌹
காதல் கவிதை வாட்ஸப் ஸ்டேட்டஸ் தமிழில்
தமிழ் காதல் கவிதைகள் மற்றும் தமிழ் காதல் 'Quotes" பற்றிய சமீபத்திய கலெக்சன் இங்கே உள்ளன. தமிழில் சிறந்த காதல் கவிதைகள்.
🌹 கனமான பொழுதுகளும்
கண நொடியில்
கரைகிறது
உடன் நீயிருக்க...☘️💕😍💚
🌹 துடிப்பும்
தவிப்பும்
எனக்கானதாகவே
இருக்க வேண்டும்
உன்னிதயம்...☘️💕😍
🌹 என் தாகம்
அறிந்தாய்
எப்படி இப்படி
பருகுகிறாயே நீரை...☘️💕😍
🌹 என் மனக்குழப்பத்தை
முதலில் தெளிவுப்படுத்து
பின்பு எனக்கான
உன் படைப்பை
தெரியப்படுத்து...☘️💕😍
🌹 இந்த நொடிகள்
போதும்
நீயுடனில்லா
நிமிடங்களில்
என் நாழிகையை
அழகாய் நகர்த்திட...☘️💕😍
🌹 கனவா நிஜமா
என்றுணரமுடியா
இதமான
ஓர் உணர்வு
எதிர்பாரா
உன் அரவணைப்பு...☘️💕😍
🌹 பேரன்பின் பெருங்
காதல் நீ...☘️💕😍
🌹 மேகத்தினுள்
மறையும் நிலவாய்
அவ்வப்போது மறைந்து
கொல்கிறாய் மனதை...☘️💕😍
🌹 நீர் துளி
தீண்டிய பாதமாய்
சில்லிடுகிறது மனம்
உன் கரம் தீண்ட...☘️💕😍
🌹 உன் வீட்டு
பறவையின் கீச்சலிள்
என் மனதிலும்
முளைக்குது சிறகுகள்
பறந்து வர உன்னிடம்...☘️💕😍
🌹 பற்றி கொண்ட
கரப்பிடிக்குள்
பத்தி கொல்(ள்)கிறது
காதல் தீயும் அனலாய்...☘️💕😍
🌹 யார் என்னை
தாழ்த்தி பேசினாலும்
நீயெனை எப்போதும்
உயர்ந்த இடத்திலேயே
வைத்திருக்கிறாய்
அன்பே உன்னிதயத்தில்...☘️💕😍
🌹 மனதோடு நீ
நினைவோடு நான்
மௌன உரையாடலில்
உன்னோடு...☘️💕😍
🌹 விழிகளுனை
தேடியதை விட
உள்ளம் உன்னில்
தொலைந்தது
தான் அதிகம்
நம் நினைவில் மூழ்கி...☘️💕😍
🌹 சட்டென
ஏந்தி கொ(ல்)ள்ளாதே
பட்டென
தவிக்குது மனம்
உன் விழியீர்பில்...☘️💕😍
🌹 கரை தொட
ஓயும் கடலலை
உன் கரம்
பட வீசும்
நம் காதலலை...☘️💕😍
🌹 கேட்காமலேயே
தீர்த்து வைக்கிறாய்
ஏக்கங்களை
தந்தையின் மடியில்
தலைசாயும்
குழந்தையாய் நான்...☘️💕😍
🌹 தயக்கம் இருந்தாலும்
நெருக்கத்தை தூண்டுகிறது
உன் நேசம்
நீ என்னவன் என்று...☘️💕😍
🌹 வார்த்தைக்கு தடைபோட்டு
விழியில் கதை பேசுகிறாய்
காதல் மொழியில்...☘️💕😍
🌹 காத்திருக்கும் கண்களில்
தேங்கி கிடக்கும்
கனவுகளை உனையன்றி
யாரறிவார் என்னுயிரே...☘️💕😍
🌹 உன் துடிப்பில்
என் மூச்சு...☘️💕😍
🌹 மொத்த திமிரின்
வடிவம் நீயென்றறிவேன்
அத்தனையும் விட்டெறிந்து
விட்டாயே
இத்தனை காதலா
என்னில் உனக்கு...☘️💕😍
🌹 இத்தனை மெனக்கெடல்
எதற்கு
ஒரு நொடியென்
விழிகளை வாசித்தால்
மன ஏட்டை
புரிந்து கொள்வாயே...☘️💕😍
🌹 உன் தீண்டலா
கொலுசின்
மென் தீண்டலா
சில்லென சிலிர்க்கிறது
நீரலையும் பாதம் தொட...☘️💕😍
0 comments: