❤️ காதல் கவிதைகள் 💚🌹
காதல் கவிதை வாட்ஸப் ஸ்டேட்டஸ் தமிழில்
தமிழ் காதல் கவிதைகள் மற்றும் தமிழ் காதல் 'Quotes" பற்றிய சமீபத்திய கலெக்சன் இங்கே உள்ளன. தமிழில் சிறந்த காதல் கவிதைகள்.
🌹 சில நேரம்
கொன்று செல்கிறாய்
பல நேரம்
கொண்டு செல்கிறாய்
மனதை...☘️💕😍
🌹 எனக்காக
எழுதும் பேனாவாய்
இருந்த
நான் உனக்காக
கரையும் மையாகி
போனேன்
உன்னில் தொலைந்த
பின்னே...☘️💕😍
🌹 நீ சென்ற பின்னே
நானும் பயணிக்கின்றேன்
உன் நினைவுகளோடு
மன பாதையில்...☘️💕😍
🌹 அத்தனையும்
ஜெயித்து விட்டதாய்
மனம் பட்டென
நீ தோள் சாய...☘️💕😍
🌹 என் மனதில்
பூத்த மென்
மலர் நீ
நான் நுகரும்
(சு)வாசமாய்
என்றும்
உதிரா நேசமாய்...☘️💕😍
🌹 மனம் தேடும்
வெப்பம்
நீ மார்கழி
குளிரில்...☘️💕😍
🌹 வண்ணம்
மாறா மயிலிறகாய்
எண்ணமெல்லாம்
நிறைந்து விட்டாய்
வருடியே
மனதை நினைவால்...☘️💕😍
🌹 உன் விரல்களில்
தான் எத்தனை
வித்தைகள்
கற்று கொடு
கொஞ்சம்
நான் வீணையும்
வாசிக்க...☘️💕😍
🌹 செல்லும் இடமெல்லாம்
உடன் நீயில்லை
என்றாலும்
உன் நினைவுண்டு
கொலுசொலியாய்...☘️💕😍
🌹 என்னுள் இருந்து
கொண்டே
எனை தவிக்கவிடும்
உன்னிதயமும்
பெரும் இம்சைதான்
நீயில்லா பொழுதுகளில்...☘️💕😍
🌹 நாட்கள் மாறலாம்
மாதங்கள் மாறலாம்
வருடங்கள் மாறலாம்
உன்னென் தோற்றங்களும்
மாறலாம் மாறாதே
என்றும் நானுன்
மீது கொண்ட காதல்
என் காதல் கணவா...☘️💕😍
🌹 ஆரம்ப புள்ளியும்
நீ முற்று புள்ளியும்
நீ என் வாழ்வில்
அழியா
வண்ண கோலமாய்...☘️💕😍
🌹 கவியெழுதும் இதழ்களுக்கு
கொஞ்சம் ஓய்வுகொடு
களைப்பாறி கொள்ளட்டும்
இளைப்பாறி கொள்கிறேன்
நானும்...☘️💕😍
🌹 விட்டு செல்கிறேன்
பாத சுவடுகளை
பயணம் முடியுமுன்
தொடர்ந்திடுவாய்
என்றே...☘️💕😍
🌹 அடிக்கடி தொட்டு
ரசிக்குது மனமும்
மல்லிகையை
உன் கரம்
சூட்டியதாலா
என்னவனே...☘️💕😍
🌹 விழி மூடி
கொள்
என்னிதயத்தில்
காண்பாய்
உனை...☘️💕😍
🌹 நெறுங்கி கொல்லாதே
ஜனனிக்கின்றேன்
மீண்டும் மீண்டும்
இறவாமலே...☘️💕😍
🌹 கரையை
உரசும் அலையாய்
உரசுகிறாய்
மனதை நினைவலையில்...☘️💕😍
🌹 எத்தனை இன்னல்களை
சந்தித்தாலும்
என் நாழிகையை
அழகாகவே
நிறைவாக்குகிறாய்
என்னவனே...☘️💕😍
🌹 மயிலிறகாய்
வருடுவதும்
நீ மௌனத்தில்
வாட்டுவதும்
நீ என் மனதை...☘️💕😍
🌹 உன் கழுத்தை
கட்டிக்கொண்டு
ஆளும் டை மீதும்
கொஞ்சம்
பொறாமையே
என்னிடத்தை
பிடித்து விட்டதே
என்று...☘️💕😍
🌹 ரசனை என்று
எதுவுமில்லை
விழிகளுக்கு
உனை தவிர...☘️💕😍
🌹 வேட்டியில் கரையாய்
படிந்து விட்டாய்
மனதில் அழித்தாலும்
அழியாத அழகிய
காதல் கறையாய்
உயிரே...☘️💕😍
🌹 நீ மிச்சம்
வைத்த தேநீரில்
எப்போதும்
சுவை அதிகம்
தான்
ஆறிப்போனாலும்...☘️💕😍
🌹 நீ மறந்து போன
ஞாபகங்களை
மனம் புதுப்பித்து
கொ(ல்)ள்கிறது தினம்...☘️💕😍
இதையும் படிங்க:🌺💚👇
- காதல் கவிதைகள் 2022 - Tamil Love WhatsApp Status ❤
- அம்மா கவிதைகள் :: Tamil Amma Kavithai 2022
- Whatsapp Picture Status :: in Tamil வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் படங்கள் 2022
- Whatsapp Status in Tamil வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சிந்தனை கவிதைகள்
- Best Tamil Love Status :: காதல் கவிதை Kavithai in Tamil Font
- Whatsapp DP :: Tamil Love Status காதல் கவிதை Kavithai in Tamil Font 💚🌹
- Tamil Kadhal Kavithaigal பெண் காதல் கவிதை வரிகள் Whatsapp Status in Tamil
- Nayanthara Tamil Love Status
- 100+ Tamil Kadhal Kavithaigal தமிழ் காதல் கவிதைகள்

0 comments: