Thursday, April 21, 2022

தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கை - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கை - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...

தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கைக்கு, ஏப்.20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1ம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள், 8ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.


மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. நடப்பாண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஏப்.21 முதல் தொடங்கி மே 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வியின் இணையதளம் (https://rte.tnschools.gov.in/) வழியாக பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும்சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறலாம். இந்த திட்டத்தில், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகள் ஆகியோரது விண்ணப்பங்கள் குலுக்கல் இல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

அதேபோல், நலிந்த பிரிவினர் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் இருக்க வேண்டும். ஒரு பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



இதையும் படிங்க:🌺💚👇


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: