கறிவேப்பிலையின் நிவாரண சக்தி!
கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு, பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோளாறு அணுகாது. எலும்புகள் பலப்படும் சோகை நோய் வரப்பயப்படும். புண்கள் விரைவில் ஆற கறிவேப்பிலை உதவுகிறது.
கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்
கறிவேப்பிலையில் வைட்டமின் “ஏ’, வைட்டமின் “பி’, வைட்டமின் “பி2′, வைட்டமின் “சி’, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.
வாய்ப்புண் உள்ளவர்கள் கறிவேப்பிலை சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும். வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும் குணம் கறிவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரணசக்தியைக் கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக் கட்டுப்படுத்தி வாந்தியைத் தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று இரச்சலைத் தடுக்கும்.
கறிவேப்பிலையை தினமும் உட்கொண்டால் குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று பிரச்சனைகள், நாள்பட்ட காய்ச்சல் போன்றவை நீங்கும்.
கறிவேப்பிலையில் உயிர்சத்து மிகுதியாக உள்ளது. இது உடலுக்கு பலத்தை கொடுக்கிறது. கறிவேப்பிலை பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. இது பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது.
கறிவேப்பிலையின் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும். உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலக்கட்டு நோய்கள் குணமாகும்.
கறிவேப்பிலை கறியில் போடப்படும் இலை என்பதாலும், அந்த கறிவேப்பிலை இலை அமைப்பு வேப்பிலையின் அமைப்பு போன்றே இருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றது.
கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட தாவரம் ஆகும். கறிவேப்பிலை மரத்தின் இலை, பட்டை, வேர் என அனைத்துப் பாகங்களும் மருத்துவ பயன் கொண்டதாகும். கறிவேப்பிலை வாசனைப் பொருளாக மட்டும் இல்லாமல், நாம் சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதற்கு காரணம் கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் சக்தி கொண்ட இலையாகும்.
கறிவேப்பிலை நன்மைகள்
கறுவேப்பிலையின் தோற்றம்
வேப்பிலை போன்று இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ.மீ நீளம், மற்றும் 1-2 செ.மீ அகலம் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாக இருக்கும். ஒவ்வொரு கொத்திலும் 10 முதல் 20 இலைகள் வரை இருக்கும். இது மர வகையை சேர்ந்தது ஆகும். “கறிவேப்பிலை மரம்” அல்லது “கறுவேம்பு மரம்” என்றழைக்கப்படும், இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ இல்லாமல் 4 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரும்.
கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்
கறிவேப்பிலையில் வைட்டமின் “ஏ’, வைட்டமின் “பி’, வைட்டமின் “பி2′, வைட்டமின் “சி’, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.
கறிவேப்பிலையின் வேறு பெயர்கள்
கறிவேப்பிலையானது கறியபிலை, கறிவேம்பு, கறிப்பில்லை என பல பெயர்களில் அழைக்கபடுகிறது.
கறிவேப்பிலை வகைகள்
கறிவேப்பிலை இருவகைப்படும் அவை, “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலையானது உணவிலும், காட்டுக் கறிவேப்பிலை மருந்து தயாரிப்பிலும் பயன்படுகிறது.
கறிவேப்பிலை மருத்துவப் பயன்கள்:
இளநரை வராமல் தடுக்கும்
நாம் சாப்பிடும் உணவு பதார்த்தங்களில் கறிவேப்பிலையை சேர்த்தால் கண் பார்வை தெளிவு பெறும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ இருப்பதால் முடி நன்றாக வளரும். இளநரை ஏற்படாமல் தடுக்கும்.
கொழுப்புகள் கரையும்
காலை வேளையில் வெறும் வயிற்றில், 20 கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடுப்பை பெறலாம்.
அஜீரணத்தை போக்கும்
ஒரு சொம்பு தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் எந்த வகையான அஜீரணம் இருந்தாலும் குணமாகும். வாயுப் பிரச்சனை இருந்தால், கறிவேப்பிலை சாற்றினைப் பருக வாயுப்பிரச்சினை மற்றும் செரிமான பிரச்சனைகள் தீரும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்
ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள், காலை வேளையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை பிரச்சனை தீரும்.
நச்சுக்களை வெளியேற்றும்
ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள சளி வெளியேறிவிடும். மேலும் கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு நிறைந்த நச்சுக்கள் வெளியேறும்.
இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
கறிவேப்பிலை இளம் துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து குடித்து வர பேதி, சீதபேதி போன்றவை குணமாகும். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலை வேளையில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீரடையும்.
கெட்ட கொழுப்புக்களை வெளியேற்றும்
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றுவதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையிலிருந்து உடலை பாதுகாக்கும்.
பசியை தூண்டும்
கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்த பிரச்சனை நீங்கி பசி அதிகரிக்கும்.
இன்சுலினை சுரக்க செய்யும்
கறிவேப்பிலைப் பொடி, நெல்லிப் பொடி, மஞ்சள் பொடி மூன்றையும் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் கணையச் செயல்பாட்டைத் தூண்டும். இதன் மூலம் உடலில் இன்சுலின் தேவையான அளவு சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை வியாதியின் தாக்கம் விரைவில் குறையும்.
கண்ணில் புரை ஏற்படுவதை தடுக்கும்
கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து சாப்பிட்டால் பித்த வாந்தி நீங்கும்.
உடலில் உள்ள கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது: நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்துகிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலத்தை கொடுக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.
கறிவேப்பிலையை உணவோடு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு இதய தசைகள் வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாவது தடுக்கப்படுகிறது.
0 comments: