Sunday, October 16, 2022

ஆபாச வீடியோவில் நடக்கிற ஆண்-பெண் உறவு உண்மையானதா அல்லது பொய்யானதா? திரைக்கு பின் உள்ள தொழில்நுட்ப உத்திகள் என்னென்ன? technical strategies behind the scenes

ஆபாச வீடியோவில் நடக்கிற ஆண்-பெண் உறவு உண்மையானதா அல்லது பொய்யானதா? திரைக்கு பின் உள்ள தொழில்நுட்ப உத்திகள் என்னென்ன? 

ஆபாச வீடியோவில் நடக்கிற ஆண்-பெண் உறவு உண்மையானதா அல்லது பொய்யானதா? திரைக்கு பின் உள்ள தொழில்நுட்ப உத்திகள் என்னென்ன? technical strategies behind the scenes

ஆபாச படங்கள் எடுக்கப்படும் போது நடிக நடிகைகளின் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்காக போதைப் பொருட்கள் பாவிக்கிறனர்.அதனால் அவர்களின் உணர்ச்சிகள் தூண்டப்படுகிறன. இயக்குனர் சொல்வதைச் செய்கிறனர்.திரைக்குப் பின்னால் ஒரு பெரிய கூட்டமே காணப்படுகிறது.அதனால் ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்தோடு கலவி கொள்கிறது அவ்வளவுதான்.அதை விட ஒரு நிமிட காணொளிக்காக 23 முறை Retake செய்கிறார்கள்.23முறை எடுத்த பின் Edit செய்து வெட்டி ஒட்டி பின்னனி குரல் எல்லாம் கொடுத்த பின்னர்தான் உங்கள் பார்வைக்கு வருகிறது.நாம் எதைப் பார்க்க வேண்டும் என்பதை இயக்குனரே தீர்மானிக்கிறார்.உணர்ச்சிகளைத் தூண்தல் எப்படியென்பதை அறிந்திருக்கிறனர் ஏனெனில் அதுதான் அவர்களின் வருமானம்.

ஆபாச இணையத்தளங்களின் வருமானம் Google Facebook YouTube போன்றவற்றினை விட பல மடங்கு அதிகமாகும்.அவ்வளவு வருமானம் கொட்டுகிறது.ஆனால் அதில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் என்பது மிகக் குறைவே.நாம் ரசிக்கும் ஆபாசப் பட நடிக நடிகைககளின் தனிப்பட்ட வாழ்க்கை சந்தோசமாக இல்லை என்பதே உண்மை.பெரும்பாலும் தனிமையில் வாடுகிறார்கள்.தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.

அளவிற்கதிகமாக போதைப் பொருள் பாவனையால் இரண்டிற்கும் மேற்பட்ட நடிகைகள் படப்பிடிப்பின் போது இறந்திருக்கிறனர்.அது எல்லாம் சட்டத்துக்குள் வராது.


ஒட்டுமொத்தமாகப் பார்க்கப் போனால் ஆபாச பட உலகம் என்பது ஒரு கானல் நீர்தான்.அதில் நடிப்பவர்களைப் போல் நாமும் ஆபாசப் படங்களினை பார்ப்பதற்காக தனிமையையே தெரிவு செய்கிறோம்.அப்போதே உணர்ந்து கொள்ளுங்கள் அவ் நடிகர்களும் தனிமையிலேயே வாடுகிறார்கள் என்று.

நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்களென்றால் தெரியும் ஆபாசப் படங்கள் எப்போதும் பெண்களை ஒரு அடிமையைப் போலவே நடத்துகிறன.அதில் தோன்றும் பெண்ணிற்கு சமத்துவம் என்பதே கிடையாது.மீண்டும் யாராவது ஆபாசக் காணொளிகளைப் பார்த்தால் கவனியுங்கள் நீங்களே உணர்வீர்கள்.பெண்களை சமமாக நடத்த வேண்டும் என்ற கோசம் மேலோங்கியுள்ள தற்போதைய காலகட்டத்தில் ஆபாசப் படங்கள் அதைக் கருத்தில் கொள்வதில்லை என்றே நினைக்கிறேன்.பாலியல் விடயத்திலும் பெண்களுக்கும் உணர்ச்சிகள் ஆசைகள் விருப்பங்களும் உண்டு.அவர்களும் மனிதர்கள்தானே.உங்கள் துணையை சமமாக நடத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆபாசப் படங்களைப் பார்ப்பதை நிறுத்தி விடுங்கள்.

தமிழ் பொக்கிஷம் YouTube Channel இல் ஆபாச படங்கள் சம்பந்தமாக காணொளி ஒன்று விக்கினேஷ் பேசியிருப்பார். பாருங்கள். 

Top 5 Small Business Loans for Women:

SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: