Saturday, October 22, 2022

இரத்த #சர்க்கரை_அளவு #எகிறாமல்_இருக்க சாப்பிட வேண்டிய #உணவுகள்!

இரத்த #சர்க்கரை_அளவு #எகிறாமல்_இருக்க சாப்பிட வேண்டிய #உணவுகள்!


❤இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் பராமரிக்க ஒருசில உணவுகளை எப்போதும் வைத்திருப்பது நல்லது. இப்போது அந்த உணவுப் பொருட்கள் எவையென்று காண்போம்.


❤#ஓட்ஸ் 



ஒரு பௌல் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்வதால் உணவுக்கு பிறகு க்ளுக்கோஸ் மற்றும் இன்சுலின் ரெஸ்பான்ஸ் குறையும். இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு, க்ளைசீமிக் கட்டுப்பாட்டை பராமரிக்கவும் உதவும்.


❤#தர்பூசணி_முலாம்பழம்

தர்பூசணி, முலாம் பழம்

அதிர்ஷ்டவசமாக, தர்பூசணி, முலாம் பழம் போன்றவை இப்போது கிடைக்கின்றன. இந்த பழங்களை நீங்கள் கடைக்கு செல்லும் போது கண்டால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய பழங்களாகும்.


❤#முட்டை 


முட்டை ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவும். முட்டையின் மூலம் ஒரு நாளைக்கு தேவையான புரோட்டீன் சத்து உடலுக்கு கிடைக்கும். ஒரு சிறப்பான விஷயம் என்னவெனில், இது நீண்ட நாட்கள் சேகரித்து வைத்திருக்கக்கூடிய ஒரு உணவுப் பொருள்.


❤#பருப்பு_வகைகள் 


பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் போன்றவை உள்ளது. இந்த மூன்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்துக்களாகும். ஆகவே பருப்பு வகைகளான பீன்ஸ், பட்டாணி, சுண்டல், கொண்டைக்கடலை போன்றவற்றை வாங்கி வைத்து, அன்றாடம் உட்கொள்ளுங்கள்.


❤#பூண்டு 



பூண்டு

பூண்டை பச்சையாகவோ, சமையலில் சேர்த்தோ அல்லது சாலட்டிலோ சேர்த்து உட்கொள்ளலாம். பூண்டில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் உட்பொருட்கள் அடங்கியுள்ளன. மேலும் இது எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் சமையலறையில் கட்டாயம் இருக்கும் முக்கியமான உணவுப் பொருளும் கூட....


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: