விவேக் இருந்திருந்தா – கலங்கிய போண்டா மணி, வடிவேலுவின் பதிலை பாருங்க.. Vadivelu about Bonda Mani.
வீடியோ கீழே 👇
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய உண்மையான பெயர் கேதீஸ்வரன்.
இவர் பல போராட்டங்களுக்கு பிறகு தான் பாக்யராஜை சந்தித்து சினிமா வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.
போண்டா மணி அளித்த பேட்டி:
இந்நிலையில் பிரபல சேனல் இவரை நேரில் சந்தித்து பேட்டி ஒன்று எடுத்திருந்தது. அதில் அவர் கூறியது, ஆறு மாதமாகவே என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. பருவ காதல் என்ற ஒரு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் சாக்கடையில் விழுகிற மாதிரி சீன் இருக்கும். அதை தத்துரூபமாக எடுக்க வேண்டும் என்று நிஜ சாக்கடையில் என்னை விழ வைத்தார்கள்.
அந்த சாக்கடை தண்ணீர் உடம்புக்குள் போனதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது.மந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையும் பண்ணினார்கள். இருந்தும் தொடர்ந்து மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு இருந்தேன்.
0 comments: