Monday, September 26, 2022

திடீரென பூமியை நோக்கி வரும் வியாழன் கிரகம் | Jupiter very close to earth

 

திடீரென பூமியை நோக்கி வரும் வியாழன் கிரகம் | Jupiter very close to earth

திடீரென பூமியை நோக்கி வரும் வியாழன் கிரகம்

நமது சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் கோள், பூமிக்கு மிக அருகில் வரும் 26-ம் தேதி (நாளை மறுதினம்) வரவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

59 ஆண்டுகளுக்கு பிறகு வானில் இப்படி ஓர் அற்புத நிகழ்வு நடைபெறவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் வியாழன் கோளின் பிரம்மாண்டத்தை மனிதர்கள் காண முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். 

பிரம்மாண்ட கோள்:

அந்த வகையில், நமது சூரியக் குடும்பத்தில் பூமி உட்பட 9 கோள்கள் இருக்கின்றன. இந்த கோள்களிலேயே மிகப் பெரியதாக அறியப்படுவது ஜூபிட்டர் எனப்படும் வியாழன் கோள் தான். இதன் அளவை விளக்குவது என்றால், நம் பூமியை போன்ற அளவுடைய 1,300 பூமிகளை வியாழன் கோளுக்குள் அடக்கிவிட முடியும் எனக் கூறலாம். அந்த அளவுக்கு பிரம்மாண்டமானது வியாழன் கோள். 

59 ஆண்டுகளுக்கு பிறகு:

இத்தனை சிறப்பு வாய்ந்த பிரம்மாண்ட வியாழன் கோள் தான், நாளை மறுதினம் பூமிக்கு மிக நெருக்கமாக வரவுள்ளது. 59 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழும் ஓர் அரிய நிகழ்வு இது என நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அன்றைய தினம், மேற்கில் சூரியன் அஸ்தமிக்கும் போது கீழக்கு திசையில் இருந்து வியாழன் எழுகிறது. இவ்வாறு பூமிக்கு நேர் எதிர் திசையில் நெருக்கமாக வியாழன் வருவதால் அதன் தோற்றம் மிக பிரம்மாண்டமாக இருக்கும்.

எவ்வளவு பக்கத்தில்?

வழக்கமாக, பூமியில் இருந்து 965 மில்லியன் கி.மீ. தொலைவில் இருக்கும் வியாழன் கோள், திங்கள்கிழமை அன்று பூமிக்கு 365 கி.மீ. தொலைவுக்கு நெருக்கமாக வந்துவிடும். இவ்வாறு பாதிக்கும் குறைவாக இரு கோள்களுக்கும் இடையேயான தூரம் குறைவதால், வியாழன் கோளை எந்த அளவுக்கு பக்கத்தில் காண முடியும் என நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள். இவ்வளவு பக்கத்தில் வருவதால் அன்றைய நாள் இரவு நம்மால் வியாழனை தெளிவாக பார்க்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.


அதே சமயத்தில், பைனாக்குலர் அல்லது சாதாரண டெலஸ்கோப்பை கொண்டு பார்த்தால் இன்னும் அருகாமையில் வியாழனின் பிரம்மாண்டத்தை பார்க்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு 1963-ம் ஆண்டு இந்த அற்புத நிகழ்வு வானில் நடந்ததாகவும், அதற்கு பின்னர் தற்போதுதான் இந்நிகழ்வு நடக்கவுள்ளதாகவும் நாசா கூறியுள்ளது. 

அதே சமயத்தில், பைனாக்குலர் அல்லது சாதாரண டெலஸ்கோப்பை கொண்டு பார்த்தால் இன்னும் அருகாமையில் வியாழனின் பிரம்மாண்டத்தை பார்க்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு 1963-ம் ஆண்டு இந்த அற்புத நிகழ்வு வானில் நடந்ததாகவும், அதற்கு பின்னர் தற்போதுதான் இந்நிகழ்வு நடக்கவுள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: