Thursday, May 5, 2022

Top 100+ 9th' std Tamil Model Questions and Answers | ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி வினா 2022

 Top +100 9th' std Tamil Model Questions and Answers 

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி வினா 2022

1. ‘நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன’ என்று கூறியவர் ………..

a) மிளைகிழான் நல்வேட்டனார்

b) கணிமேதாவியார்

c) மாங்குடி மருதனார்

d) நல்லந்துவனார்

Answer:  c)  மாங்குடி மருதனார்

2. ‘இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை’ என்று போற்றப்படுபவர் ………

a) பென்னி குயிக்

b) விஸ்வேஸ்வரய்யா

c) சர்.பக்கிள்

d) சர். ஆர்தர் காட்டன்

Answer:  d)  சர். ஆர்தர் காட்டன்

3. ‘கிராண்ட் அணைக்கட்’ என்று அழைக்கப்படுவது …………

a) பக்ரா நங்கல்

b) ஹிராகுட்

c) சர்தார் சரோவர்

d) கல்லணை

Answer:  d)  கல்லணை

4. ‘மிசை’ – என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a) கீழே

b) மேலே

c) இசை

d) வசை

Answer:  a)  கீழே

5. ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ பாடியவர் …………

a) அபிராமி பட்டர்

b) சுந்தரர்

c) நம்பியாண்டார் நம்பி

d) சேக்கிழார்

Answer:  c)  நம்பியாண்டார் நம்பி

6. பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக் கருவூலம் …………..

a) நற்றிணை

b) ஐங்குறுநூறு

c) கலித்தொகை

d) புறநானூறு

Answer:  d)  புறநானூறு

7. திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ……….. ல் உள்ளது.

a) கோத்தகிரி

b) கரிகையூர்

c) ஆதிச்சநல்லூர்

d) கல்லூத்து மேட்டுப்பட்டி

Answer:  d)  கல்லூத்து மேட்டுப்பட்டி

8. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்………………………………

a) சீவகசிந்தாமணி

b) சிலப்பதிகாரம்

c) மணிமேகலை

d) வளையாபதி

Answer:  c)  மணிமேகலை

9. தீரா இடும்பை தருவது எது?

a) ஆராயாமை, ஐயப்படுதல்

b) குணம், குற்றம்

c) பெருமை, சிறுமை

d) நாடாமை, பேணாமை

Answer:  a)  ஆராயாமை, ஐயப்படுதல்

10. தாவோ தே ஜிங் என்னும் கவிதையை மொழிபெயர்த்தவர் ………………

a) சி.மணி

b) கவிமணி

c) ந.பிச்சமூர்த்தி

d) வல்லிக்கண்ணன்

Answer:  a)  சி.மணி

11. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் …………

a) ஹாங்க் மாக்னஸ்கி

b) ஈஸ்ட்ம ன்

c) தாமஸ் ஆல்வா எடிசன்

d) சென்கின்சு

Answer:  a)  ஹாங்க் மாக்னஸ்கி

12. தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியவர் ……..

a) செஸ்டர் கார்ல்சன்

b) ஸ்டீபன் ஹாக்கின்ஸ்

c) ஸ்டீவ் ஜாப்ஸ்

d) ஜான் ஷெப்பர்டு பாரன்

Answer:  d)  ஜான் ஷெப்பர்டு பாரன்

13. இந்திய மொழிக் குடும்ப வகைகள் …………………

a) 8

b) 18

c) 6

d) 4

Answer:  d) 4

14. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ………..க்கும் மேற்பட்டது.

a) 1200

b) 1300

c) 800

d) 1000

Answer:  b) 1300

15. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் ………..

a) இலங்கை, சிங்கப்பூர்

b) அமெரிக்கா, கனடா

c) பிரான்சு, இங்கிலாந்து

d) நார்வே, சுவீடன்

Answer:  a)  இலங்கை, சிங்கப்பூர்

16. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடியவர் …..

a) பாரதிதாசன்

b) நாமக்கல் கவிஞர்

c) கவிமணி

d) பாரதியார்

Answer:  d)  பாரதியார்

17. தமிழ்விடு தூது ……………என்னும் இலக்கியத்தைச் சார்ந்தது.

a) தொடர்நிலைச் செய்யுள்

b) புதுக்கவிதை

c) சிற்றிலக்கியம்

d) தனிப்பாடல்

Answer:  c)  சிற்றிலக்கியம்

18. மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்

a) தமிழ்விடு தூது

b) தமிழோவியம்

c) திருக்குற்றால குறவஞ்சி

d) முக்கூடற்பள்ளு

Answer:  a)  தமிழ்விடு தூது

19. தமிழின் வண்ணங்கள்…………….

a) 20

b) 96

c) 18

d) 100

Answer:  d) 100

20. தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்…………………

a) பெருஞ்சேரல் இரும்பொறை

b) உ.வே.சாமிநாதர்

c) அடியார்க்கு நல்லார்

d) ஆறுமுகநாவலர்

Answer:  b)  உ.வே.சாமிநாதர்

21. தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர்………………

a) பலபட்டடைச் சொக்கநாதர்

b) என்னயினாப் புலவர்

c) சத்திமுத்தப் புலவர்

d) எவருமில்லை

Answer:  d)  எவருமில்லை

22. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

a) அகழி

b) ஆறு

c) இலஞ்சி

d) புலரி

Answer:  d)  புலரி

23. பாண்டி மண்டலத்தில் ஏரியை ……….. என்று அழைப்பர்.

a) ஊருணி

b) கண்மாய்

c) குளம்

d) அகழி

Answer:  b)  கண்மாய்

24. உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள் ……..

a) ஜுன் 5

b) மார்ச் 20

c) அக்டோபர் 5

d) பிப்ரவரி 2

Answer:  a)  ஜுன் 5

25. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

a) தேசியத் திறனாய்வுத் தேர்வு

b) ஊரகத் திறனாய்வுத் தேர்வு

c) தேசியத் திறனாய்வுத் தேர்வ

d) மூன்றும் சரி

Answer:  b)  ஊரகத் திறனாய்வுத் தேர்வு

26. யசோதர காவியம் ………….. நூல்களில் ஒன்று.

a) எட்டுத்தொகை

b) பத்துப்பாட்டு

c) ஐம்பெருங்காப்பியம்

d) ஐஞ்சிறுகாப்பியம்

Answer:  d)  ஐஞ்சிறுகாப்பியம்

27. கழனிகள் சுமக்க வேண்டியது ……

a) கதிர்கள்

b) வெம்பிய பழங்கள்

c) வறண்ட தாவரம்

d) அழுகிய பொருள்கள்

Answer:  a)  கதிர்கள்

28. தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள் …………

a) 30

b) 33

c) 24

d) 27

Answer:  d) 27

29. ‘ஆர்யபட்டா’ என்ற இந்திய முதல் செயற்கைக்கோளை ஏவுவதற்கு காரணமானவர் ………………..

a) விக்ரம் சாராபாய்

b) விஸ்வேஸ்வரய்யா

c) கிரண்குமார்

d) ராதாகிருஷ்ணன்

Answer:  a)  விக்ரம் சாராபாய்

30. திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஆய்வு மையம்……………….

a) பாபா அணு ஆராய்ச்சி மையம்

b) இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்

c) சதீஷ் தவன் விண்வெளி ஏவுதள மையம்

d) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்

Answer:  d)  விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்

31. இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் யார்?

a) கே.ஆர். நாராயணன்

b) திருமதி. பிரதீபா பாட்டில்

c) ஆர். வெங்கட்ராமன்

d) ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

Answer:  d)  ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

32. புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

a) பாரதியார்

b) பாரதிதாசன்

c) மீரா

d) ந.பிச்சமூர்த்தி

Answer:  d)  ந.பிச்சமூர்த்தி

33. அடையாற்றில் புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு ……… நிறுவியவர் …….

a) 1982, ரமாபாய்

b) 1952, முத்துலெட்சுமி

c) 1960, ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

d) 1970, சிவகாமி

Answer:  b)  1952, முத்துலெட்சுமி

34. “முடியாது பெண்ணாலே” என்ற மாயையினை முடக்க எழுந்தவர் ………

a) அறிஞர் அண்ணா

b) அம்பேத்கர்

c) தந்தை பெரியார்

d) காமராஜர்

Answer:  c)  தந்தைபெரியார்

35. “பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ” என இடி முழக்கம் செய்தவர் யார்?

a) பாரதியார்

b) பாரதிதாசன்

c) கவிமணி

d) நாமக்கல் கவிஞர்

Answer:  b)  பாரதிதாசன்

36. ஹண்டர்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ………..

a) 1972

b) 1952

c) 1872

d) 1882

Answer:  d) 1882

37. மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எது?

a) சொல்

b) பொருள்

c) யாப்பு

d) அணி

Answer:  c)  யாப்பு

38. “பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்

a) இராஜேஸ்வரி அம்மையார்

b) காரைக்கால் அம்மையார்

c) நீலாம்பிகை அம்மையார்

d) சிவகாமி அம்மையார்

Answer:  c)  நீலாம்பிகை அம்மையார்

39. ஈ.வெ.ரா – நாகம்மை இலவசக்கல்வி உதவித்திட்டம் ………. உரியது.

a) பட்டமேற்படிப்பிற்கு

b) பட்டய மேற்படிப்பிற்கு

c) பொறியியல் படிப்பிற்கு

d) மருத்துவ படிப்பிற்கு

Answer:  a)  பட்டமேற்படிப்பிற்கு

40. “உம்மைத்தொகை” அமைந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு.

a) வில்வாள்

b) பணமும் படையும்

c) மலரும்

d) ஆண்க ளும்

Answer:  a) வில்வாள்

41. சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?

a) குடும்ப விளக்கு

b) இருண்ட வீடு

c) அழகின் சிரிப்பு

d) பிசிராந்தையார் நாடகம்

Answer:  d)  பிசிராந்தையார் நாடகம்

42. குடும்ப உறவுகள் ………… என்னும் நூலால் பிணைந்துள்ளது.

a) கோபம்

b) அன்பு

c) அடக்கம்

d) கவலை

Answer:  b)  அன்பு

43. குடும்ப விளக்கு ………….. பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

a) 4

b) 6

c) 5

d) 7

Answer:  c) 5

44. கல்வியை உடைய பெண்கள் …………… ஆவார்.

a) உவர் நிலம்

b) பண்படாத நிலம்

c) திருந்திய கழனி

d) கிணற்றுத் தவளை

Answer:  c)  திருந்திய கழனி

45. “விதையாமை நாறுவ” நாறுவ என்பதன் பொருள் யாது?

a) கெடாதிருத்தல்

b) முதுமையடையாது இருத்தல்

c) முளைப்ப

d) இளைப்ப

Answer:  c)  முளைப்ப

46. உரையாமை என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?

a) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

b) வினையாலணையும் பெயர்

c) பெயரெச்சம்

d) எதிர்மறைத் தொழிற்பெயர்

Answer:  d)  எதிர்மறைத் தொழிற்பெயர்

47. சிறுபஞ்சமூலம் இயற்றியவர் …………….

a) பூதஞ்சேதனார்

b) கணிமேதாவியார்

c) கபிலர்

d) காரியாசான்

Answer:  d)  காரியாசான்

48. காரியாசானின் ஆசிரியர் …………….

a) மாங்குடி மருதனார்

b) மாக்காயனார்

c) கணிமேதாவியார்

d) பூதஞ்சேதனார்

Answer:  b)  மாக்காயனார்

49. சிறுபஞ்சமூலம் பாடல்கள் ஒவ்வொன்றிலும் இடம் பெறும் கருத்துகள் ………….. ஆகும்.

a) இரண்டு

b) மூன்று

c) ஐந்து

d) ஆறு

Answer:  c)  ஐந்து

50. சிறுபஞ்சமூலம் ……………. நூல்களுள் ஒன்று.

a) எட்டுத்தொகை

b) பத்துப்பாட்டு

c) பதினெண்கீழ்க்கணக்கு

d) பதினெண்மேற்கணக்கு

Answer:  c)  பதினெண்கீழ்க்கணக்கு

51. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றியவை ………….. ஆகும்.

a) காப்பியங்கள்

b) சிற்றிலக்கியங்கள்

c) மறுமலர்ச்சி இலக்கியங்கள்

d) நீதிநூல்கள்

Answer:  d)  நீதிநூல்கள்

52. பாரதியார் ………….. வயதிலேயே அரசவையில் கவிதை எழுதினார்.

a) 10

b) 12

c) 11

d) 14

Answer:  c) 11

53. 16 வயதிலே படைத்தளபதி ஆனவர் யார் …………..

a) அலெக்சாண்டர்

b) நெப்போலியன்

c) அகஸ்டஸ்

d) அக்பர்

Answer:  a)  அலெக்சாண்டர்

54. நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்றவர்……………..

a) அறிஞர் அண்ணா

b) காந்தியடிகள்

c) ஆபிரகாம் லிங்கன்

d) வின்சென்ட் சர்ச்சில்

Answer:  c)  ஆபிரகாம் லிங்கன்

55. அண்ணா நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் தமிழக அரசு உருவாக்கியது …………

a) நூலகம்

b) அருங்காட்சியகம்

c) நினைவில்லம்

d) பூங்கா

Answer:  a)  நூலகம்

56. வீட்டிற்கோர் புத்தக சாலை என்பது அண்ணாவின் ………… ஆகும்.

a) தொலைக்காட்சி உரை

b) இலக்கியச் சொற்பொழிவு

c) வானொலி உரை

d) அரசியல் மேடைப் பேச்சு

Answer:  c)  வானொலி உரை

57. தென்னகத்துப் பெர்னாட்ஷா என்றழைக்கப்பட்டவர் ………..

a) காமராஜர்

b) தந்தை பெரியார்

c) அறிஞர் அண்ணா

d) திரு.வி.க

Answer:  c)  அறிஞர் அண்ணா

58. அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு

a) 2010

b) 2012

c) 2014

d) 2013

Answer:  a) 2010

59. நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு

a) 2006

b) 2008

c) 2009

d) 2010

Answer:  c) 2009

60. இருமொழிச்சட்டத்தை உருவாக்கியவர் யார்?

a) காமராஜர்

b) மு.கருணாநிதி

c) அறிஞர் அண்ணா

d) எம்.ஜி.ஆர்

Answer:  c)  அறிஞர் அண்ணா

61. மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ……………… ஆகும்.

a) உரிச்சொற்கள்

b) பெயர்ச்சொற்கள்

c) வினைச்சொற்கள்

d) இடைச்சொற்கள்

Answer:  d)  இடைச்சொற்கள்

62. சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவுப் பொருளில் வரும் இடைச்சொல் ……..

a) இல்லை

b) அம்இ

c) ஆம்

d) இல்

Answer:  c)  ஆம்

63. உரிச்சொல் எப்பொருள்களுக்கு உரியதாய் வரும். ( 1.  குறிப்பு, 2. பண்பு)

a) 1 சரி

b) 2 சரி

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

Answer:  c)  இரண்டும் சரி

64. உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?

a) நன்னூலார்

b) தொல்காப்பியர்

c) இறையனார்

d) வீரமா முனிவர்

Answer:  a)  நன்னூலார்

65. ஒழியிசை முதலா அசைநிலை ஈறாக எட்டுப்பொருளில் வரும் இடைச்சொல் எது?

a)

b)

c)

d)

Answer:  c)  ஓ

66. பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று ……………………..

a) மாமல்லபுரம்

b) பிள்ளையார் பட்டி

c) திரிபுவனவீரேசுவரம்

d) தாடிக்கொம்பு

Answer:  a)  மாமல்லபுரம்

67. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ………..

a) விலங்கு உருவங்கள்

b) தீர்த்தங்கரர் உருவங்கள்

c) தெய்வ உருவங்கள்

d) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

Answer:  b)  தீர்த்தங்கரர் உருவங்கள்

68. திருவரங்கக்கோவில் யாருடைய காலத்துக் கட்டடக் கலைக்குச் சான்றாகிறது.

a) பாண்டியர்

b) சோழர்

c) பல்லவர்

d) சேரர்

Answer:  b)  சோழர்

69. விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடப்படுவது எது …………

a) மைல்கல்

b) சுடுகல்

c) நடுகல்

d) கருங்கல்

Answer:  c)  நடுகல்

70. இருபதாம் நூற்றாண்டின் தனித்தமிழ் பெருங்காப்பியம்.

a) கம்பராமாயணம்

b) இராவணகாவியம்

c) தண்ணீர்த்தேசம்

d) பொன்னியின் செல்வன்

Answer:  b)  இராவணகாவியம்

71. யாப்பதிகாரம், தொடையதிகாரம் எழுதியவர்

a) பெருந்தேவனார்

b) வாணிதாசன்

c) வரந்தருவார்

d) புலவர் குழந்தை

Answer:  d)  புலவர் குழந்தை

72. இராவண காவியத்தின் பாடல்கள்

a) 2100

b) 2500

c) 3100

d) 3500

Answer:  C) 3100

73. திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்தியவர்கள் ……………..

a) நாயன்மார்கள்

b) ஆழ்வார்கள்

c) சமணர்கள்

d) தேவர்கள்

Answer:  b)  ஆழ்வார்கள்

74. ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?

a) நம்மாழ்வார்

b) பேயாழ்வார்

c) பெரியாழ்வார்

d) பூதத்தாழ்வார்

Answer:  c)  பெரியாழ்வார்

75. நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்கள்

a) 110

b) 140

c) 120

d) 150

Answer:  b) 140

76. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு …………….. ஆகும்.

a) பெரிய புராணம்

b) நாலாயிரதிவ்ய பிரபந்தம்

c) நளவெண்பா

d) பூதத்தாழ்வார்

Answer:  b)  நாலாயிர திவ்ய பிரபந்தம்

77. சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜானகிராமனின் நூல் எது?

a) சக்தி வைத்தியம்

b) கருங்கடலும் கலைக்கடலும்

c) நடந்தாய் வாழி காவேரி

d) அடுத்த வீடு ஐம்பது மைல்

Answer:  a)  சக்தி வைத்தியம்

78. தி.ஜானகிராமன் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆண்டு

a) 1969

b) 1979

c) 1989

d) 1999

Answer:  b) 1979

79. எழுத்து வகையால் சொற்கள் ………… வகைப்படும்.

a) 2

b) 3

c) 4

d) 5

Answer:  c) 4

80. காணாதான் காட்டுவான் – காணாதான் யார்?

a) அறிவுடையான்

b) அறிவில்லாதவன்

c) அன்புடையான்

d) பண்புடையான்

Answer:  b)  அறிவில்லாதவன்

81. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற ஆண்டு ……

a) 1948

b) 1932

c) 1942

d) 1952

Answer:  c) 1942

82. இந்திய தேசிய இராணுவத்தில் ….. பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.

a) முத்துலட்சுமி

b) நீலாம்பிகை

c) வள்ளியம்மை

d) ஜான்சிராணி

Answer:  d)  ஜான்சிராணி

83. இன்பங்களைத் துறந்து துறவு பூணவேண்டும் என்னும் கருத்து அமைந்த காப்பியம் எது?

a) சிலப்பதிகாரம்

b) வளையாபதி

c) குண்டலகேசி

d) சீவகசிந்தாமணி

Answer:  d)  சீவகசிந்தாமணி

84. சீவகசிந்தாமணிக்குரிய மற்றொரு பெயர் யாது?

a) மனநூல்

b) மணநூல்

c) மங்கல நூல்

d) சமண நூல்

Answer:  b)  மணநூல்

85. சீவகசிந்தாமணியின் இலம்பகங்கள் எத்தனை?

a) பதினான்கு

b) பதினைந்து

c) பதினாறு

d) பதின்மூன்று

Answer:  d)  பதின்மூன்று

86. சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?

a) இளங்கோவடிகள்

b) சீத்தலைசாத்தனார்

c) திருத்தக்கத்தேவர்

d) கணிமேதாவியர்

Answer:  c)  திருத்தக்கத்தேவர்

87. சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?

a) நரிவெண்பா

b) நரிவிருத்தம்

c) சிந்தாமணிமாலை

d) காவடிச்சிந்து

Answer:  b)  நரிவிருத்தம்

88. திருத்தக்கத்தேவர் பின்பற்றிய சமயம் எது?

a) பௌத்தம்

b) சமணம்

c) வைணவம்

d) சைவம்

Answer:  b)  சமணம்

89. மதுரைக்காஞ்சி பாடியவர் யார்?

a) கபிலர்

b) பரணர்

c) ஓரம்போகியார்

d) மாங்குடி மருதனார்

Answer:  d)  மாங்குடி மருதனார்

90. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள முத்தொள்ளாயிரத்தின் செய்யுள்கள்

a) 106

b) 108

c) 110

d) 112

Answer:  b) 108

91. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ………….

a) நக்கீரர்

b) பரணர்

c) கபிலர்

d) அறிய முடியவில்லை

Answer:  d)  அறிய முடியவில்லை

92. மதுரைக்காஞ்சி நூலின் மொத்த அடிகள் எத்தனை?

a) 732

b) 752

c) 782

d) 792

Answer:  c) 782

93. மதுரைக்காஞ்சி நூல் மதுரை நகரின் சிறப்புகளை எத்தனை அடிகளில் பெருமைப்படுத்தி உள்ளது?

a) 254

b) 284

c) 324

d) 354

Answer:  d) 354

94. கார் அறுத்தான் – எவ்வகை ஆகுபெயர்?

a) பொருளாகு பெயர்

b) காலவாகு பெயர்

c) சினையாகு பெயர்

d) கருவியாகு பெயர்

Answer:  b)  காலவாகு பெயர்

95. சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

a) 1921

b) 1922

c) 1925

d) 1926

Answer:  c) 1925

96. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடியவர் யார்?

a) கபிலர்

b) வள்ளுவர்

c) கணியன் பூங்குன்றனார்

d) ஔவையார்

Answer:  c)  கணியன் பூங்குன்றனார்

97. சாகித்ய அகாதெமி விருது பெற்ற கல்யாண்ஜியின் நூல் எது?

a) புலரி

b) ஆதி

c) உயரப்பறத்தல்

d) ஒரு சிறு இசை

Answer:  d)  ஒரு சிறு இசை

98. ‘குறுந்தொகை’ நூலைப் பதிப்பித்தவர் யார்?

a) பூரிக்கோ

b) சௌரிப்பெருமாள் அரங்கனார்

c) பிள்ளைப்பெருமாள்

d) உ.வே.சாமிநாதர்

Answer:  b)  சௌரிப்பெருமாள் அரங்கனார்

99. பின்வருநிலை அணியின் வகை…………..

a) 3

b) 4

c) 5

d) 6

Answer:  a) 3

100. தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

a) உருவகம்

b) உவமை

c) வஞ்சப்புகழ்ச்சி

d) தற்குறிப்பேற்றம்

Answer:  C)  வஞ்சப்புகழ்ச்சி



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: