Thursday, May 26, 2022

கவர்ச்சியில் பாடகி ஜொனிதா காந்தி!! வர வர டிரெஸ் குறைஞ்சுகிட்டே போகுது..!!

கவர்ச்சியில் பாடகி ஜொனிதா காந்தி!! வர வர டிரெஸ் குறைஞ்சுகிட்டே போகுது..!! 

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் பாடியவர் பாடகி ஜோனிடா காந்தி.இவர் மணி ரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் மென்டல் மனதில் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த பாடலின் மூலம் இசை ரசிகர்களை கட்டிப்போட்டார்.இதே போல நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தில் இவர் பாடிய அழகியே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.



இவர் 1989 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இவர் இளம் வயதிலேயே இசை துறையில் ஆர்வம் கொண்டவர்.ஜொனிதா தனது கல்லூரி படிப்பை கனடாவில் வணிக துறையில் பட்டம் பெற்றார். இவர் கல்லூரி நாட்களில் தனது இசை திறமையை நன்கு வளர்த்து கொண்டார். இவர் 1995 ஆம் ஆண்டு டொராண்டோவில் தனது முதலாவது இசை நிகழ்ச்சியை நடத்தினார்.இவர் 2011 ஆம் ஆண்டு யூட்யூப் கவர் சாங் மூலம் இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்.


பாலிவுட்டில் நடிகர் ஷாருக் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது.



இவர் 24, அச்சம் என்பது மடமையடா, வேலைக்காரன்,கோலமாவு கோகிலா, காற்று வெளியிடை மற்றும் இரும்புத்திரை, போன்ற பல படங்களில் பாடியுள்ளார். இவர் ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.



அனிருத் இசையில் டாக்டர் படத்தில் பாடிய செல்லம்மா பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. பீஸ்ட் படத்தில் இவர் அனிருத்துடன் இணைந்து பாடிய அரபிக் குத்து பாடல் பட்டித்தொட்டி எங்கும் வைரல் ஆனது.இவர் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.இவர் அவ்வபோது போட்டோ ஷூட் செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது குட்டையான உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: