Sunday, May 22, 2022

நமது வீட்டின் மின்சார செலவை இந்த முறையிலும் குறைக்கலாம்...

நமது வீட்டில் உள்ள மின்சாரத்தில் இயங்கும் பொருட்களை சிறந்த முறையில்பராமரிப்பு செய்வதன் மூலம் நமது வீட்டின் மின்சாரா கட்டணத்தை குறைக்க முடியும். நம் பாதுகாப்புக்கும் நல்ல உத்தரவாதம் கிடைக்கும். நமது வீட்டின் வயரிங் 20 வருடங்களுக்கு பழையதாக இருந்தால் அதை கட்டாயம் ரிவாயரிங் செய்ய வேண்டும். பழைய வாயரிங் முறைக்கு அமைய சுவருக்கு வெளிபகுதியில் வயரிங்கை குழாய்களில் பதித்து வாயரிங் செய்யப்பட்டிருக்கும். இந்த காலத்தில் சுவரின் உள்ளேயே வயரிங்கை செய்யப்படுகின்றது . இந்த சுவரின் உள்ளே வாயரிங் சிறந்தது என்று மினியலாளர்கள் பரிந்துரையாகும். நல்ல அனுபவமிக்க மின் பொறியியலாளர்களின் கண்காணிப்பில் கொண்டு மின் பொருட்களை பராமரிப்பது நன்று.

43000/= ஆயிரம் ரூபாய் கொடுத்து A .C வாங்குவோம். ஆனால் A .C க்கு பொருத்தமான I.S .I தரச் சான்று பெற்ற stabilizer வாங்க மாட்டோம் . தரம் குறைந்த ஸ்டெபிலைசரினால் நமது தரமான மின்சாரா பொருட்களை உயர் மின்னழுத்தத்தினால் காப்பாற்ற முடியாது. நமது குளிர் சாதன பெட்டியில் அதிகமான பொருட்களை திணித்து வைக்காதீர்கள். எப்போதுமே நமது குளிர் சாதன பெட்டியில் 25% அளவுக்கு (free space) காலி இடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் இதனால் நமது குளிர்சாதன பெட்டியின் வாழ்நாள் அதிகரிக்கும். 

சலவை இயந்திரத்தில் தேவையான அளவுக்கு மட்டும் நீர் சலவை பவுடர் சேர்த்து பயன்படுத்த வேண்டும். மின்சாரா பொருட்கள் மீது சூரிய ஒளி நேரடியாகச் படாதவாறு வைக்க வேண்டும் மின்சாரா பொருட்களின் பாவனைக்கு பின்னர் அதன் மின்சாரா இணைப்பை கட்டாயம் துண்டித்துவிட வேண்டும். இப்படி செய்வதால் தேவையற்ற மின் கசிவை முற்றாக தவிர்க்கலாம். மின்சாரா இணைப்புகளை அகற்றிவிட்டு மின்சாரா பொருட்களை கிழமைக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

இயந்திரத்தை பயன்படுத்திய பின்னர் அதன் உள்பகுதியை நன்றாக காயும் வகையில் சில நிமிடங்கள் அதன் மூடியை திறந்து வைக்கவேண்டும் . நமது சமயலறையில் இருக்கும் மைக்ரோ வேவ் அவனில் உலோகதில்லானா பாத்திரங்களை அறவே பயன்படுத்த கூடாது . நடுஇரவில் நமது படுக்கை அறை அதிகமாக குளிர்ந்தவுடன் ரிமோட்டை பயன்படுத்தி A .C யை off செய்து விடுவீர்கள். ஆனால் கொஞ்சம் சிரமம் பாராமல் எழுந்து அதன் சுவிட்சையும் off செய்து விட்டு படுக்கவும். 

how to save on electric bill,

electricity saving tips,electric saver,

reduce electric bill,

saving electricity at home,

saving electricity and money,

how to save electric,save on electric bill,

electricity saving,saving electricity,power saving



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: