Monday, November 15, 2021

Medicinal Benefits of papaya பப்பாளியில் உள்ள மருத்துவ குணங்கள்.. Alltamilfans

பப்பாளியில் உள்ள மருத்துவ குணங்கள்.. 🍉🤔👇

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.



தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப் பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.


நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

இதையும் படிங்க:🌺💚👇


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: