Monday, October 4, 2021

முளைகட்டிய பயிரும் முக்கியமான மருத்துவமும்

தமிழர்களின் தானிய உணவே தரமான உணவு ; முளைகட்டிய பயிரும் முக்கியமான மருத்துவமும்..!!

நம் முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமான காரணம் இயற்கையான தானிய உணவும், முளைகட்டிய உணவுமுறையும்தான். 

ஒரு நாளுக்கு மூன்று வேலை இல்லாவிட்டாலும் ஒரு வேளையாவது முளைகட்டிய தானிய பயிர்களை நாம் உண்ண வேண்டும் இதன் மூலம் நம் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கிறது.


பச்சைப்பயறு, வேர்க்கடலை, கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து போன்றவற்றை கலவையாக இரு கைப்பிடி வரும் அளவிற்கோ அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப அளவு தண்ணீரில் நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.பின்னர் சுமார் ஏழு மணி நேரம் அல்லது 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின் தானியங்களை எடுத்து ஈரமான (சுத்தமான) காட்டன் துணியில் வைத்து முடித்து வைத்துவிடுங்கள்.


காட்டன் துணியில் 7 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரத்திற்குள் அனைத்து தானியங்களும் முளைவிட்டு இருக்கும். முளைப்பகுதிகளை நீக்காமல் அப்படியே எடுத்து உண்ணுங்கள். இயற்கையில் தானிய உணவில் கிடைக்கும் வேறு எந்த உணவிலும் கிடையாது. 

இந்த முளைகட்டிய உணவில் இரும்புத்தாது, சோடியம், புரதம், பொட்டாசியம், கால்சியம் போன்ற இயற்கையான சத்துக்கள் கிடைக்கின்றன.

மேலும், இந்த தானிய உணவுகளில் இருந்து வைட்டமின் B2, வைட்டமின் B1, வைட்டமின் A போன்ற அபரிமிதமான இயற்கை ஊட்டச் சத்துகளும் கிடைக்கின்றன. முளைவிட்ட உளுந்து தானியத்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கிறது. கொள்ளு போன்ற உணவுகளால் உடல் எடை குறைந்து, மூட்டு வலி போன்றவை நீங்கி நல் ஆரோக்கியத்தை கொடுக்கிறது.






SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: