ஆண்கள் எந்த வயதில் வயதுக்கு வருகின்றனர்?
வீடியோ கிழே 👇
பெண்களை போல ஆண்பிள்ளைகள் வயதுக்கு வரும் நிகழ்வு திடுமென ஒரு நாளில் நடைபெறாததால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. பெண்கள் பூப்படையும் போது கொடுக்கும் முக்கியத்துவமும் ஆண் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.
வீடியோ கிழே 👇
பொதுவாக 13–14 வயதில் ஆண் பிள்ளைகள் பருவ வயதை எட்டுகின்றனர்.இந்த வயதில் இரணடாம் பருவ மாற்றங்கள் நிகழும். குரலில் ஆண் தன்மை, தொண்டை குழல் வெளி வருதல், முகத்தில் முடி வளர்தல், முகப்பரு போன்ற அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதைவிட அதிகமாக கவனிக்கத்தக்கது உளவியல் ரீதியான மாற்றங்கள் தான்.
பெற்றொரிடம் இருந்து ஒதுங்கி இருத்தல், அடிக்கடி கோபம், சோகம், மகிழ்ச்சி என உணர்ச்சி மாற்றம், தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்று நினைப்பது, மற்றவர்களை கவரும் வண்ணம் உடை, தலைமுடி ஒப்பனை செய்வது, தனக்கென தனிப்பட்ட இடத்தை ஒதுக்கி கொள்வது போன்ற மாற்றங்கள் வரும்போது பெற்றோர், குறிப்பாக தந்தை பருவ மாற்றத்தை உணர்ந்து ஆண்பிள்ளைகள் அதை சரியாக கடந்து வர வழிகாட்டி உதவ வேண்டும்.
0 comments: